இன்னும் சில ‘பினிஷர்களை’ கண்டுப்பிடிக்கவுள்ளோம்: மஹேல

18 Sep, 2020 | 12:36 PM
image

ஹார்திக் பாண்ட்யாவின் வேலைப்பலுவை மனதில் வைப்பது அவசியம், கிறிஸ் லீன் ஆரம்ப வீரராக களமிறங்கமாட்டார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுநரான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். வரலாற்றில் 4 தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ள ஒரே அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறையும் சம்பியன் பட்டத்தை வெல்ல ஆர்வமாக உள்ளது. அவ்வணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் ஹார்திக் பாண்ட்யா, பொல்லார்ட் ஆகியோர் சிறந்த ‘பினிஷர்களாக’ உள்ளனர். கடைசி நேரத்தில் ஒரு ஓவருக்கு 20 ஓட்டங்களுக்கு மேல் தேவை என்றாலும் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கக்கூடிய தகுதி பெற்றவர்கள். மேலும், பந்து வீச்சிலும் அசத்தக்கூடியவர்கள்.

Need to be mindful of Hardik Pandya's workload, trying to find few more  finishers: MI coach Mahela Jayawardene | Cricket News - Times of India

ஹார்திக் பாண்ட்யாவின் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால், சுமார் ஒரு வருடம் விளையாடாமல் இருந்து, தற்போது ஐ.பி.எல். தொடரில் களமிறங்கவுள்ளார்.

இந்நிலையில் ஹார்திக் பாண்ட்யாவின் வேலைப்பலுவை குறித்து மனதில் வைப்பது அவசியம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுநரான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஹேல மேலும் கூறுகையில், ‘‘ஹார்திக் பாண்ட்யா காயத்துக்குப் பிறகு விளையாட வந்துள்ளார். நாங்கள் அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வலைப் பயிற்சியில் சிறப்பாக செயற்பட்டார். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக பாண்ட்யா சகோதரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். இது அணிக்கு அதிக வலுவை கொண்டு வரும்.

ஹார்திக் பாண்ட்டியாவை நாங்கள் முன்னதாக மாறுபட்ட ‘ரோலில்’ பயன்படுத்தினோம். அதேபோன்றுதான் தற்போதும் எதிர்பார்க்கிறோம். அதேபோல் மற்ற சில வீரர்களையும் நாங்கள் அதில் ஈடுபடுத்த முடியும். அதற்கான வாய்ப்பு வரும்போதெல்லாம், நாங்கள் அவர்களிடம் போட்டியை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்வோம்.

இது ஹார்திக் பாண்ட்யா மட்டும் செய்ய வேண்டியதில்லை. ஆனால், இது அவரின் பொறுப்புகளில் ஒன்று. ஆகவே, எங்கள் முகாமில் உள்ள வீரர்களை மாறுபட்ட வழிகளில் பயன்படுத்தி சவாலான ‘ரோலை’ செய்வதற்கு முயற்சி செய்ய விரும்புகிறோம். அதை நாங்கள் தொடர்ச்சியாக செய்யவுள்ளோம்’’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58