கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளிள் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை தொடரந்து இன்று காலை 111 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

அந்தவகையில் டுபாயில் இருந்து 22 பேரும் , கட்டாரில் இருந்து 52 பேரும் , ஜப்பானில் இருந்து 30 பேர் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து 7 பேர் உள்ளடங்களாக மொத்தமாக 111 பேர் இன்று நாட்டை வந்தடைந்நதனர்.

கொரோனா வைரஸை தடுக்கும் முகமாக நாட்டிற்கு வந்தடைந்த 111 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.