சமூக ஊடகங்களை பயன்படுத்தி பொது மக்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக இதுவரை 14 வெளிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீனா, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 வெளிநாட்டினரே இவ்வாறு இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி அண்மைக் காலங்களில் 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை பொது மக்களிடமிருந்து மோசடி செய்துள்ளனர்.

டிஜிட்டல் லொட்டரி திட்டங்கள், ஒன்லைன் பரிசுகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் இவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தனர். 

இவ்வாறான மோசடி தொடர்பில் இதுவரை 101 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இது போன்ற மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அந் நியர்களுக்கு தமது தனிப்பட்ட தரவுகளை வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்திக் கேட்டுள்ளனர்.