நைஜீரியாவின் 13 வயது சிறுவன் ஒருவன்  அல்லாஹ்வை அவதூறாக பேசியதாக குற்றஞ் சாட்டி பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

நைஜீரியாவின் வடக்கு கானோ மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தால் உமர் ஃபாரூக் என்ற சிறுவனுக்கே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Lawyers for 13-year-old Farouq say the lengthy sentence he received for his blasphemy conviction is unconstitutional and violates international laws for the protection of children. Above, inmates at a prison in the central Nigerian city of Jos.

நண்பன் ஒருவனுடனான வாக்குவாதத்தின் போது குறித்த சிறுவன் அல்லாஹ்வை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளான்.

இதனையடுத்து ஆகஸ்ட் 10 ஆம் திகதி சிறுவன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதையடுத்து, செப்டம்பர் 7 ஆம் திகதி வரை தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்யாததையடுத்து கடந்த புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

In some Muslim countries, sharia law is associated with tough punishments for adultery, blasphemy and crimes such as theft. An Indonesian woman is whipped in public in Banda Aceh

எனினும் இவ் தீர்ப்பு நைஜீரிய அரசியலமைப்பிற்கு  சர்வதேச சட்டத்திற்கும் விரோதமானது என்று யுனிசெப் மற்றும் வழக்கறிஞர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்து குறித்து  ஐக்கிய நாடுகளின் சிறுவர்  நிதியம் கடந்த புதன்கிழமை, வெளியிட்டுள்ள அறிக்கையில், யுனிசெப்  இந்த வழக்கைப் பற்றி 'ஆழ்ந்த அக்கறை' கொண்டுள்ளது என்றும், 'தண்டனையை மாற்றியமைக்கும் நோக்கில்' அதை அவசரமாக பரிசீலிக்க கனோவின் ஷரியா நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

13-year-old Omar Farouq was sentenced to ten years in jail on Tuesday for blasphemy by a Sharia court in Kano State, northwestern Nigeria. The boy is said to have 'used foul language' against Allah during an argument with a friend

'தெய்வ நிந்தனை நைஜீரிய சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இது நைஜீரியாவின் அரசியலமைப்பிற்கு முரணானது, '' எனவும் 2001 ஆம் ஆண்டில் நைஜீரியா ஒப்புதல் அளித்த குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலனுக்கான ஆபிரிக்க சாசனம் உட்பட குழந்தைகளின் உறிமைகள் தொடர்பான அனைத்து சட்டங்களையும் இத் தீர்ப்பு மீறுவதாக வழக்கறிஞர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த  நீதிமன்றத்தில் சமீபத்தில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறாக பேசியதற்காக ஒருவருக்கு மரண தண்டனையை வழங்கியுள்ளது.