தற்போது நடைபெற்று வரும் பயணச் சீட்டு மோசடிக் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு மாதமொன்றுக்கு 120 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ் நடத்துனர்கள் பயணிகளுடம் பயணச்சீட்டுக்கான பணத்தை வசூலித்து, பயணச் சீட்டுகளை வழங்க மறுப்பதன் விளைவாகவே இந்த நஷ்டயீடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

அதேநேரம் பயணிகள் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்வதை உறுதிசெய்யுமாறும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவ்வாறான பேருந்து நடத்துனர்களை கண்டறிவதற்காக தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், சோதனை நடவடிக்கையை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றார்.