கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா உறுதியானதை அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர், அதிமுக கட்சியின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார்.

1998 இல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.