ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான தனது எல்லையில் 18 சந்தைகளை பாகிஸ்தான் நிறுவும் என்று பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு திட்டத்தின்படி, ஆப்கானிஸ்தான் எல்லையில் 12 சந்தைகளும், ஈரானுடனான எல்லைப் பகுதிகளில் ஆறு சந்தைகளும் நிறுவப்படும் என்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

அதன்படி ஆரம்பத்தில் மூன்று சந்தைகளை நிறுவுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் கூறினார்.

இந்த மூன்று சந்தைகளும், ஈரானுடன் இரண்டு மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் 20 பெப்ரவரி 2021 க்குள் நிறைவு செய்யப்பட்டு செய்யப்படும் என்று இம்ரான் கான் அதிகாரிகளிடம் கூறினார். 

இந்த உயர் மட்ட சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா ஆகியோர் அடங்குவர்.