நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வீதி போக்குவரத்து ஒழுங்கு முறையில் புதிய மாற்றமொன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக இடம் வழங்க தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆய்வின் போதே  மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக இடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இத் தீர்மானத்திற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் போக்குவரத்து திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.