நேற்றைய தினம் நாட்டில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3246 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஓமான் , ஐக்கிய அரபு இராச்சியம் , கட்டார் மற்றும் மடகஸ்காரில் இருந்து நாடு திரும்பிய ஐந்து பேருக்கே இவ்வாறு தொற்று காணப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா தொற்றில் இருந்து நேற்றைய தினம் 22 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3043 ஆக அதிகரித்துள்ளதோடு , கொரோனா தொற்றில் சிகிச்சைகள் பலனின்றி 13 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் 220 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.