வடமேற்கு சவுதி அரேபியாவின் தபுக் மாகாணத்தில் 120,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் விலங்குகளின் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பழைய உலர்ந்த ஏரியிலேயே இந்த கால் தடங்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஏரி 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிற்கும் யூரேசியாவிற்கும் இடையில் ஒரு முக்கியமான நுழைவாயிலாக இருந்தது.

தற்போது இப் பகுதி நெஃபுட் பாலைவனமாக மாறியுள்ளது.

பண்டைய வறண்ட ஏரியைச் சுற்றி மனிதன், ஒட்டகங்கள், யானைகள், காட்டு விலங்குகள் மற்றும் வேட்டையாடுபவர்களின் கால் தடங்களாக இது இருக்கலாம் என்று சவுதி-சர்வதேச தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏழு மனித கால்தடங்கள், 107 ஒட்டக கால்தடங்கள், 43 யானை தடம் மற்றும் பல்வேறு விலங்குகளின் தடயங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் ஆராச்சியாளர்களர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.