பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நான்கு துப்பாக்கி துளைக்காத பஸ் வண்டிகளை கொள்வனவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2009 அம் ஆண்டிற்கு பிறகு எந்தவொரு அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டிகள் தற்போதுவரை ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே நடாத்தி வருகின்றது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் வருமானம் குறைவடைந்து வருவதாக அன்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை கருத்திற்கொண்டு வெளிநாட்டு அணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நான்கு துப்பாக்கி துளைக்காத பஸ் வண்டிகளை கொள்வனவு செய்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கருத்து தெரிவிக்கையில், இனிவரும் காலங்களில் வெளிநாட்டு அணிகளின் வருகையை கருத்திற்கொண்டே பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருவதாகவும், எங்களால் முடிந்தளவான பாதுகாப்பை அணிகளுக்கு வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.