உலகில், 6 கோடி ஆண்டுகளுக்கு முன், டைனோசர்கள் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

டைனோசரின் எலும்பு படிமங்கள் பிரபல அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஸ்டான் என்ற டைனோசர் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது.

தெற்கு டகோட்டாவில் உள்ள பழம்பொருள் ஆராய்ச்சியாளர் 1987 ஆம் ஆண்டு ஸ்டான் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தார்.

இந்த எலும்புக்கூடு பிரித்தானியாவில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டது.

 இது செல்வந்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனை ஏலத்தில் எடுக்க பல நாடுகள் முயற்சிசெய்து வருகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த எலும்புக்கூடு ஏலம் விடப்பட உள்ளது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது டைனோசரஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்டான் 40 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்டது. இந்த டைனோசரின் பல் 16 இன்ச் நீளம் கொண்டது.

'லிசார்டு கிங்' என, அழைக்கப்படும் ஸ்டான் வகை டைனோசர் எலும்பை ஆராய்ச்சி செய்தவர்கள், அது வாழ்ந்த காலத்தில் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு, அந்த முறிவுடன் அது வாழ்ந்துள்ளது' எனக் கூறுகின்றனர்.

மன்ஹாட்டன் நகரில் இது ஏலம் விடப்படும். அதற்கு முன் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தவுள்ளனர்.