(நா.தனுஜா)

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பிப்பதன் முதற்கட்டமாக சிகிச்சை வழங்கல் பிரிவு (கிளினிக்) கட்டடத்தொகுதியை நிர்மாணிக்கும் பொறுப்பு மஹா என்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் 54 மாணவர்களுக்கு வகுப்புத்தடை - Newsfirst

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பிப்பதற்காக சிகிச்சை வழங்கல் பிரிவு (கிளினிக்) கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டு, அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதற்காக தேசிய ரீதியில் போட்டித்தன்மையான கேள்விமனு கோரப்பட்டது.

அதற்கமைவாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசின்படி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்கான சிகிச்சை வழங்கல் பிரிவு (கிளினிக்) கட்டடத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் 1013.87 மில்லியன் ரூபாவிற்கு (இதற்காக பெறுதிசேர் வரியுடனான தொகைக்கு) மஹா என்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.