முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய மூவர் மீது சட்டமா அதிபர் உயர் நீதமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்.

திவிநெகும திட்டத்தின் 33 மில்லியன் ரூபா நிதியை  நடந்து முடிந்த தேர்தலில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.