கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு (பீபா) உலகம் முழுவதுமுள்ள கழக மட்ட, சர்வதேச மட்ட கால்பந்தாட்ட போட்டிகளின்  மூலம் கிடைக்கும் வருமானத்தில் 14 பில்லியன் அமெரிக்க டொலர்  (இலங்கை மதிப்பில் 2.55 இலட்சம் கோடி ரூபா) வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பீபா மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஏறக்குறைய 6 மாதங்கள் கழக மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் ச நடத்தப்பட முடியாதிருந்தது. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றியே போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 14 பில்லியன் அமெரிக்க டொலர்  இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில் உறுப்பினராக உள்ள 211 நாடுகளுக்கு உட்பட்டது.

மேற்கண்ட தகவலை  பீபாபிவின் கொரோனா நிவாரண திட்டத்துக்கான செயற்குழுத்தலைவர் ஓலி ரேஹ்ன் தெரிவித்தார்.