பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி பயனித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 குறித்த விபத்து இன்று பிற்பகல் புத்தளம் கொழும்பு முகத்திடலிற்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 6 மாதக் குழந்தை விபத்தில்  உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்ததுடன் மேலும் இருவர் படு காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர். 

மதுரங்குளி கனமுல்லை பகுதியைச் சேர்ந்த 6 மாத குழந்தையே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

குழந்தையின் சடலம் வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது. இதன்போது காரின் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.