இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'டாக்டர்' படத்தின் அப்டேட் தகவல்கள் வெளியாகி உள்ளது.

'கோலமாவு கோகிலா' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'டாக்டர்'. இந்தப்படத்தில் சிவ கார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு திரை உலகிலிருந்து நடிகை பிரியங்கா அருள் மோகன் நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். 

இவர்களுடன் யோகி பாபு, மிலிந்த் சோமன், வினை ராய், அருண் அலெக்சாண்டர், சுனில் ஷெட்டி, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.

இந்தப் படத்தை சிவ கார்த்திகேயனின் சொந்த பட நிறுவனமான எஸ் கே புரொடக்சன்ஸ் , கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.