ஆப்பிள்  தொழில்நுட்ப நிறுவனம் பயனர்களுக்கு ஐபோன், ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச்சின் புதிய மென்பொருள் புதுப்பிப்பை நேற்று இரவு வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்திய iOS 14 புதிய அம்சங்களையும் செயல்திறன் மேம்பாடுகளையும் புதிய அம்சமாக கொண்டுவருகிறது.

இந்த மென்பொருள் புதுப்பிப்பு ஐபோன் 6  மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் கிடைக்கும், இது பயனர்களுக்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்புத் திரை, விட்ஜெட் கேலரி மற்றும் ஆப் கிளிப்புகள் மற்றும் புதிய சிரி இன்டபேஸ் அம்சங்களை கொண்டுள்ளது.

After months of anticipation, Apple is set to release its new iOS 14 Wednesday, September 16

 இவ் மென்பொருள் புதுப்பிப்பை நேற்று முதல் அனைத்து இணக்கமான ஐபோன்களிலும் செயற்படுத்த முடியும்.

 ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மேக்ஸ், ஐபோன் 11 புரோ, ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6 எஸ், ஐபோன் 6 எஸ் பிளஸ் ஆகியவற்றை சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்புக்கு மேம்படுத்த முடியும். 

iOS 14 மற்றும் iPadOS 14 யை  மேம்படுத்தும் செயல்முறை எளிதானது.

A redesigned home screen is reintroducing widgets that can be placed alongside apps. For instance, a weather widget will allow users viewing their home screens to check the weather without having to open the app individually

IOS, iPadOS புதுப்பிப்பை பதிவிரக்கி செயற்படுத்தும் முன் கவனிக்க  வேண்டிய விடயங்கள்:

1. உங்கள் சாதனத்தை நிலையான வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கவும். ஏனென்றால் புதுப்பிப்பு அளவு பெரியது மற்றும் நிறைய தரவுகளை பதிவிரக்க வேண்டியிருக்கும்.

2. புதுபிக்கும் போது உங்கள் ஆப்பிள் சாதனத்தைப் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டாம். இது செயல்முறையை மேலும் துரிதப்படுத்தும்.

3. புதுபிப்பு பொத்தானை அழுத்துவதற்கு முன்பு உங்கள் சாதனத்தின் எல்லா தரவையும், அரட்டையையும் காப்புப் பிரதி எடுப்பதை  உறுதிசெய்யுங்கள். 

IOS 14 மற்றும் iPadOS 14 யை  புதுப்பிக்கும் முறை

1. உங்கள் ஐபோன் / ஐபாடில் உள்ள அமைப்புகளின் மெனுவுக்கு செல்லுங்கள்..

2. ஜெனரலைத்  தேர்ந்தெடுக்கவும். 

3. பின்னர் சாஃப்ட்வேர் அப்டேட் யை கிளிக் செய்க.