வீட்டில் சமையல் அலுவல்களில் ஈடுபட்டிருந்த போது மண்ணெண்ணெய் சிதறியதால் தீப்பற்றிக் கொண்ட 19 வயது இளம் குடும்பப் பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் குமாரவேலியார் கிராமத்தில் வசித்து வந்த புவனேசராஜா சலோமியா (வயது 19) என்ற இளம் குடும்பப் பெண்ணே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக மண்ணெண்ணெய் அவர் அணிந்திருந்த ஆடைகளில் சிதறியுள்ளது.
அதனைப் பொருட்படுத்தாது அவர் தீப்பெட்டியைக் கொளுத்தி அடுப்பை எரிய வைத்தபோது அது ஆடையில் பற்றிப் பிடித்ததால் தீக்காயங்களுக்குள்ளான அவர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சமயம் சிகிச்சை பயனின்றி புதன்கிழமை உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM