இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு நேற்று இரவு 8.35 மணியளவில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டுச் செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10 இலட்சத்து 19,203 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களையும் 109 வங்கி அட்டைகளையும் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 32 வயதுடைய கல்முனையை சேர்ந்த ஆண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு 10 இலட்சம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.