இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் விழா, கொரோனா அச்சத்துக்கு மத்தியில் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நமீதா பொதுமக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கி கொண்டாடியுள்ளார்.

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா.... பொதுமக்களுக்கு இலவசமாக மீன் வழங்கிய நமீதா

தமிழகத்தின் பா.ஜ.க. மீனவர் அணி செயற்குழு உறுப்பினரான நமீதாவின் பங்கு பற்றுதலுடன் சென்னையில் நேற்று  இடம்பெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவில், சூரை, சங்கரா, சீலா, அயிலா வகை மீன்கள் சுமார் 370 கிலோ கிராம் நிறையுடைய மீன்கள் நமீதாவினால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 

இதன் போது கருத்து தெரிவித்த நமீதா  “பிரதமர் மோடி பிறந்தநாள் எனும் பொது நிகழ்ச்சியில் முதன்முதலில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் எனது கட்சி பா.ஜ.க. மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறது. இந்த பெருமை எனக்கு உண்டு. பிறந்தநாள் வாழ்த்துகள் மோடிஜி”, என தெரிவித்துள்ளார்.