வவுனியாவில் காட்டு யானையின் தாக்குதல் - மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்

By T Yuwaraj

17 Sep, 2020 | 12:15 PM
image

வவுனியா ஓமந்தைப்பகுதியில் நேற்று இரவு காட்டு யானை கிராமத்திற்குள் புகுந்து விவசாயின் வீட்டிற்குள் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை சேதப்படுத்தியதுடன் பயன் தரும் மரங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளதாக வீட்டின் உரிமையாளாரால் அதிகாரிகளிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், 

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள சங்கரத்திமோட்டை ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராமத்திற்தள் நேற்று இரவு வேளையில் நாங்கள் தற்காலிக வீட்டில் அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் முன்பக்க சுவரை உடைத்துக்கொண்டு உட்புகுந்த யானை ஒன்று அங்கு அடுக்கிவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துச் சென்றுள்ளது . 

இதன்போது வீட்டில் நின்ற பயன்தரும் மரங்களையும் அடித்து நொருக்கிச் சென்றுவிட்டதாகவும் காட்டு யானைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்து தருமாறும் வீட்டின் உரிமையாளர் சிவலிங்கம் சிவரூபன் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பஸ்தர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகத்தான்புதுக்குளத்திற்கு 18 கிலோ மீற்றர் நீளமான பகுதிக்கு காட்டுயானை வேலி அமைத்துத்தருமாறு பல அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டும் இன்று வரையிலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . எனவே பல்வேறு அச்சத்துடன் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு மத்தியில் வசித்து வருகின்றோம் . பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனைத்தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கசினோ சட்டமூலத்துக்கு அரச நிதிக்குழு அனுமதி...

2022-11-28 13:13:30
news-image

காரைநகரில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக கவனயீர்ப்பு...

2022-11-28 13:18:39
news-image

ஓமான், ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள 154...

2022-11-28 13:07:38
news-image

பஷில் விமான நிலையத்திற்குரிய கட்டணத்தை செலுத்தியுள்ளார்...

2022-11-28 12:15:41
news-image

டயானா கமகேவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு...

2022-11-28 12:20:16
news-image

லொறிச் சாரதியிடம் 12,000 ரூபா இலஞ்சம்...

2022-11-28 12:12:41
news-image

இந்திய அமைதிப்படையினருக்கு எதிரான மக்கள் யுத்தத்தில்...

2022-11-28 12:11:35
news-image

தலையில் தாக்கப்பட்ட காயங்களுடன் மஹாவெலவில் பெண்ணின்...

2022-11-28 12:11:34
news-image

சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக...

2022-11-28 11:53:39
news-image

வெலிகம கடற்கரையில் பேஸ்புக் ஊடான களியாட்டத்தில்...

2022-11-28 11:46:26
news-image

காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் 64...

2022-11-28 11:28:14
news-image

என்னால் இலங்கை போன்ற ஒரு நிலையை...

2022-11-28 11:27:32