கிளிநொச்சி பாராதிபுரத்தில் 11 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்து குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்னர்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி கைது செய்யப்பட்ட நபர் பரந்தனில் வசிப்பர் என விசாரணையில் தெரியவந்துள்ளதோடு , குறித்த நபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாகம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.