வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலா மதுரோவின் அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக ஐ.நா.வின் உயர்மட்ட மனித உரிமைகள் அமைப்பின் சுயாதீன வல்லுநர்கள் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மின்சார தாக்குதல்கள் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்திய வெனிசுலாவின் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் கொலைகளின் சம்பவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடனான 270 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை மனித உரிமைகள் அமைப்பின் சுயாதீன வல்லுநர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்களில் தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் ஜெனரல் கிறிஸ்டோபர் ஃபிகியூராவும் அடங்குவார்.