நாட்டில் நேற்றைய தினம் எவ்வித புதிய கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை.

அதன்படி நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 3,271 ஆக காணப்படுகின்றது.

இதில் 14  வெளிநாட்டவர் உள்பட 237 கொரோனா தொற்று நோயாளர்கள் தொற்றாள் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 5 பேர் பூரண குணமடைந்து நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ள நிலையில் , கொரேனா தொற்றிலிருந்து குணமானோரின் எண்ணிக்கை 3,021 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மேலும் 608 பேர் இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.