பேலியகொடை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனை நடவடிக்கைகளின் போது பேலியகொடை - 1 ஆம் குறுக்குத்தெரு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டியொன்று நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 100 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் பெற்ற பணம் 3 இலட்சம் ரூபா ஆகியன மீட்கப்ட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் முழுப் பெறுமதி 4 இலட்சம் ரூபா என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.