Intex Aqua Lite ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ள OrangeIT

Published By: Priyatharshan

15 Jul, 2016 | 12:30 PM
image

இலங்கையில் Intex டெக்னொலஜிஸ் நிறுவனத்தின் பிரதான பங்காளரான OrangeIT நிறுவனம், அதன் புதிய வகை ஸ்மார்ட்ஃபோன் தெரிவான Intex Aqua Lite இனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்ஃபோன் தெரிவாக Intex Aqua Lite திகழ்கிறது. 1.3 GHz Quad Core புரோசஸர், 512 MB RAM, 4 GB ROM* (OS மற்றும் apps களுக்குபயன்படும் மெமரி) மற்றும் அன்ட்ரொயிட் Lollipop 5.1 தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கைபேசி ஊடாக தெளிவான புகைப்படங்களை எடுக்கவும், வீடியோக்களை கண்டுகளிக்கவும், பாடல்களை கேட்டு மகிழவும் முடியும். இந்த ஸ்மார்டஃபோன் தெரிவின் விலை ரூ. 6299/- ஆகும்.

இந்த ஸ்மார்ட்ஃபோன் 1600 வர்ணங்கள் மற்றும் 800 x 400 ரெசலூஷனுடன் 4 அங்குல தொடுதிரையுடன் வருகின்றன. 1.3 GHz Quad Core processor மற்றும் 512 512 MB RAM இனால் வலுவூட்டப்பட்ட இந்தஸ்மார்ட்ஃபோன் ஒட்டுமொத்தமாக பயன்படுத்துநருக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இரட்டை சிம் பயன்பாட்டினைக் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனில் 4 மணித்தியால talk-time உம், 200 மணித்தியால standby நேரத்தையும் கொண்ட 1400mAh பற்றரி காணப்படுகிறது.

“எமது வாடிக்கையாளர்களுக்கு எப்போதுமே சகாயமான விலையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதையே Intex விரும்புகிறது. பல்வேறு புதிய அம்சங்களுடன் Quad Core இனால் Intex Aqua Lite வலுவூட்டப்பட்டுள்ளது. இந்த தெரிவு எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என நாம் திடமாக நம்புகிறோம்” என Intex டெக்னொலஜிஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவின் பிரதம பொது முகாமையாளர் விஷ்வாஸ் அகர்வால் தெரிவித்தார்.

2-megapixel பின்பக்க மற்றும் முன்புற கமராவும் கொண்டுள்ள Intex Aqua Lite இன் மூலமாக தெள்ளத்தெளிவான புகைப்படங்களை பிடித்துக்கொள்ள முடியும். Smart wake, flip mute, double tap,panorama mode, face detection மற்றும் victory gesture போன்ற பல்வேறு உள்ளம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பன்முக ஓடியோ , வீடியோ வகைகளுக்கு ஏற்ற வகையில் 4GB ROM உள்ளடக்கப்பட்டுள்ள 3G வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன் இதுவாகும்.

இந்த அறிமுகம் குறித்து OrangeIT நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் கொடிதுவக்கு கருத்து தெரிவிக்கையில், 

“மிகவும் சகாயமான விலையில் உயர்தரமான உற்பத்திகளை இலங்கையருக்கு வழங்குவதற்காக எம்மை அர்ப்பணித்துள்ளோம். மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே எமது குறிக்கோளாகும். 

இலங்கையில் ஏக விநியோகஸ்தராக Intex டெக்னொலஜியுடன் கைகோர்த்தமையும் எமது இலக்கை அடைவதற்கான அடுத்தக்கட்ட படிமுறையாகும்” என்றார். Intex Aqua Lite ஸ்மார்ட்ஃபோன்கள் க்ளாசிக் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right