ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்த 'ஹைஃபு ஃபோகல் தெரபி' என்ற புதிய சிகிச்சை கண்டறிய பட்டிருப்பதாகவும், இந்த சத்திர சிகிச்சை ஏற்ற நவீன சிகிச்சை நல்ல பலனை வழங்கும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது புரோஸ்டேட் புற்றுநோய். ஆண்டுதோறும் ஒரு மில்லியன் புதிய புரோஸ்டேட் புற்று நோயாளிகள் உருவாகிறார்கள் என்று அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புரோஸ்டேட் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறிந்தால் அதனை பக்கவிளைவு இன்றி குணப்படுத்துவதற்கு hifu focal therapy என்ற புதிய சிகிச்சை நல்லதொரு பலனை வழங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இத்தகைய சிகிச்சையின்போது புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எளிதாக கண்டறிய முடியும் என்றும், அதனை சத்திர சிகிச்சை இன்றி மின் அதிர்வலை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த இயலும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இதன்போது அருகிலுள்ள ஆரோக்கியமான செல்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த சிகிச்சைக்கு தற்போது உலக அளவில் நல்லதொரு வரவேற்பை கிடைக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர் குரு பாலாஜி.

தொகுப்பு அனுஷா.