ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி அண்மைக் காலங்களில் 61 மில்லியன் ரூபா நிதியை பொது மக்களிடமிருந்து மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் லொட்டரி திட்டங்கள், ஒன்லைன் பரிசுகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் மோசடி செய்பவர்கள் செயற்பட்படு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை குறிப்பிட்ட லால் செனவிரத்ன, இவ்வாறான மோசடி தொடர்பில் இதுவரை 101 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றள்ளதாகவும் கூறினார்.