இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு 'எவனென்று நினைத்தாய்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

'மாநகரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கி, முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மாஸ்டர்' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் 'எவனென்று நினைத்தாய்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் பணியாற்றும் ஏனைய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கடைகள் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.