உலகில் மிகப் பழமையான விலங்கு எது என்று கேட்டால் நம்மில் பலருக்கு விடை தெரியாது.
தெரிந்தாலும் அதை சரி என்று உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் கைவசம் இல்லை.
நீர்வாழ் உயிரினங்கள் தான் உலகில் முதலில் தோன்றின என்பது யாவரும் அறிந்ததே.

இதுவரை இடம்பெற்ற புவியியல் ஆய்வுகளின் மூலமாக கிடைக்கப்பெற்ற முடிவுகளின்படி 17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு வகை மீன் இனத்தின் விந்தணுக்களே உலகின் மிகப் பழமையான விந்தணுவாக  இருந்தது.

இந்நிலையில் சீன அறிவியல் நிறுவனம், வரலாற்று ஆய்வாளர் வாங் ஹு தலைமையில் புவியில் உயிரினங்களின் வாழ்வு பற்றிய ஆய்வினை மியன்மாரில் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ஒரு சிறிய ஓட்டு மீனுக்குள் உறைந்திருந்த உலகின் மிக பழமையான விலங்கு விந்தணு ஒரு மரத்தின் பிசின் குமிழிக்குள் சிக்குண்டு  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் மரப்பிசினுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மீனின் விந்தணு


“இந்த விந்தணு சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையானது” என ஆய்வுக் குழுவின் தலைவர் வாங் ஹு தெரிவித்துள்ளார்.

ஆழ்கடல் பகுதிகளில் வாழும் மீன் இனமான ஒஸ்ட்ராகோட் மீனின்  விந்தணுவே இது என்பது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.