தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு கண்ணாடிப் போத்தல்களை உபயோகிக்கவும் !!!

Published By: Priyatharshan

15 Jul, 2016 | 12:06 PM
image

‘Believers in Glass’ இயக்கம் Piramal Glass Ceylon PLC (PGC) நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களில் தண்ணீரை வைத்துப் பேணுவதற்காக கண்ணாடிப் போத்தல்களை இலவசமாக வழங்கியுள்ளது. 

2016 ஜுலை 2 ஆம் திகதியன்று தெரிவுசெய்யப்பட்ட லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவற்றை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

‘நச்சுத் தண்ணீரை அருந்திய பின்னர் வாகனத்தை செலுத்த வேண்டாம்’ என்ற தலைப்பிலான பிரச்சாரத்தின் கீழ் பிளாஸ்திக் போத்தல்களில் தண்ணீரை எடுத்துச் செல்வதையோ அல்லது அவற்றை நீண்ட நேரத்திற்கு வைத்துப் பேணுவதையோ தவிர்க்குமாறு மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

பிளாஸ்திப் போத்தல்களில் ஏற்படுகின்ற இரசாயனக் கசிவுகள் தண்ணீரில் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்படுகின்றது. இது தொடர்பில் Piramal Glass Ceylon PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான சஞ்சய் திவாரி விளக்கும் போது கூறுகையில்:

- தண்ணீரை (mineral water) பிளாஸ்திக் போத்தலில் அடைக்கும் போது உலக சுகாதார ஸ்தாபனம் நிர்ணயித்துள்ள அளவுகளை விடவும் 27% அதிகமான புரோமேற்றினைக் கொண்டுள்ளதாகவும் (1லீற்றருக்கு 2 மில்லி கிராம் என்பதே அதியுச்ச எல்லை) அதிகமான குளோரைற்று மற்றும் குளோரேற்று ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகவும் பல்வேறுபட்ட சர்வதேச ஆராய்ச்சிகள் புலப்படுத்தியுள்ளன.

பிளாஸ்திக் போத்தலில் அடைக்கப்படும் திரவங்களில் ஆன்டிமனி, ஈயம் மற்றும் கட்மியம் போன்ற ஆபத்தான மூலக்கூறுகள் காணப்படுவதாக மற்றுமொரு ஆராய்ச்சி புலப்படுத்தியுள்ளது.

பிளாஸ்திக் போத்தல்கள் 40 பாகை செல்சியஸ் அளவுக்கு அதிகமாக வெப்பமான சூழ்நிலையில் உள்ள போது தண்ணீருக்குள் Bisphenol A (BPA) மற்றும் Diethylhexyl phthalate (DEHP) போன்ற இரசாயனங்களின் கசிவு ஏற்படுவதால் தண்ணீர் நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகின்றது. ஆனால் கண்ணாடிப் போத்தல்கள் அத்தகைய இரசாயனங்களிலிருந்து பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.

நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்கள் உங்களுடைய நோய் எதிர்ப்புத் தொகுதியை பாதிக்க வாய்ப்புள்ளதுடன், ஹோர்மோன் சமநிலையின்மை, வழுக்கை, சிறுவர்கள் மத்தியில் ஆஸ்துமா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கணைய தொழிலிழப்பு, ரூடவ்ரல் மற்றும் சிறுநீரக வியாதிகள் மற்றும் புற்றுநோயை கூட ஏற்படுத்தலாம்.

BPA ஆனது கருத்தரிக்கும் வாய்ப்பைப் பாதிப்பதுடன் கருக்கலைவு தொடர்பில் அதிக ஆபத்தைக் கொண்டுள்ளதாக புதிய ஆராய்ச்சி முடிவுகள் காண்பித்துள்ளன. ஆண்டிமனியானது இதயத் தசையை சேதப்படுத்துவதுடன் கட்மியமானது சுவாசப் பாதையில் நோய்த் தோற்றுக்களை ஏற்படுத்துகின்றது. DEHP ஆனது ஏற்கனவே பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட தரவுகள் அனைத்தும் நாங்கள் தண்ணீரை எப்போதும் கண்ணாடிப் போத்தல்களிலேயே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே காண்பிக்கின்றன.

கண்ணாடிப் போத்தல்களை உபயோகிப்பதால் எமக்கு கிடைக்கும் நன்மைகளை Believers in Glass இயக்கம் மேலும் விளக்கியுள்ளது.

கண்ணாடி இயற்கையான மூலப்பொருட்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. வெளிப்புற காரணிகளால் ஏற்படும் விளைவுகளிலிருந்து போதிய பாதுகாப்பை அளிப்பதால் கண்ணாடி எமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றது. கண்ணாடி நுண்துளைகள் அற்றதுடன் ஊடுபுக விடாது.

கடுமையான வெப்பம் மற்றும் குளிர் நிலைமைகளையும் தாக்குப்பிடிக்கும் ஆற்றலை கண்ணாடி கொண்டுள்ளதுடன், அதிலுள்ள திரவத்தில் எதிர்விளைவுகள் ஏற்படுவதை இது தடுப்பதுடன் திரவத்தின் புதிய தன்மை கெட்டுப்போகாது அதனை நீண்ட நேரத்திற்கு வைத்துப் பேணவும் உதவுகின்றது.

உணவின் நறுமணம், சுவை மற்றும் புதிய தன்மை கெட்டுப்போகாது அவற்றைப் பேண கண்ணாடி உதவுவதுடன் அவற்றினுள் உள்ளவற்றை எவ்விதத்திலும் பாதிக்காது. உணவை அதன் புதிய தன்மை மாறாது நீண்ட நேரத்திற்கு வைத்து, கெட்டுப் போகாது பேணுவதற்கு இது மிகவும் உகந்த ஒரு தெரிவு.

ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் கண்ணாடியிலான பாத்திரங்கள் மற்றும் போத்தல்களை உபயோகிப்பதால் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்குப் புறம்பாக சுற்றுச்சூழல் சார்ந்த நற்காரணங்களும் உள்ளன.

உலகளாவில் 5 இற்கு 1 என்ற அடிப்படையிலேயே பிளாஸ்திக் போத்தல்கள் மீள்சுழற்சி செய்யப்பட்டு பாவனைக்கு விடப்படுகின்றன. எஞ்சியவை எரியூட்டப்படுகின்றன அல்லது மண்ணில் புதைக்கப்படுகின்றன. இந்த பிளாஸ்திக் போத்தல் ஒவ்வொன்றும் இயற்கையாகவே உக்கிப் போவதற்கு 700 வருடங்கள் வரையான காலம் தேவைப்படுகின்றது.

பிளாஸ்திக் போத்தல்கள் வனசீவராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் சூழலையும் மாசுபடுத்துகின்றன. இதனால் நாம் வாழும் உலகின் அழகுக்கும் குந்தகம் ஏற்படுகின்றது. ஆனால் கண்ணாடியானது 100% மீள்சுழற்சி செய்யப்படக்கூடியதாக உள்ளதுடன் இதனால் சூழலுக்கு தீங்கு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

கண்ணாடியானது 100% மீள்சுழற்சி செய்யப்படக்கூடியதாக உள்ளமையால் உபயோகிக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல் ஒன்றை எப்போதும் மீள்சுழற்சி செய்து புதிதாக்கிக் கொள்ள முடியும். மீள்சுழற்சி செய்யப்படுகின்ற ஒவ்வொரு தொன் கண்ணாடியும் புதிய கண்ணாடியை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுகின்ற ஒரு தொன் மூலப்பொருட்களை சேமிக்க உதவுகின்றன. இது நிலத்தினுள் சென்றடையாது எரிசக்தியைப் பாதுகாத்து எமது சூழலுக்கு தீங்கு ஏற்படாமல் இருப்பதற்கு கண்ணாடி உதவுகின்றது என்பதை நிரூபிக்கின்றது.

பொதுமக்கள் மத்தியில் பொதியிடலுக்கு மிகச் சிறந்த வடிவத்தை உபயோகிப்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு அறிவூட்டுவதற்காக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட “Believers in Glass” என்ற இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியே இதுவாகும்.

PGC நிறுவனம் தனது வர்த்தக சமூக பொறுப்புணர்வு முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் கழிவுகளை சேகரிப்பதில் சுயமாக ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து கண்ணாடி கழிவுகளை சேகரித்து அவற்றை மீள்சுழற்சி செய்வது நிறுவனத்தின் பாரிய செயற்பாடுகளில் ஒன்றாகும். இது நாட்டில் எரிசக்தியையும், இயற்கை வளங்களையும் சேமிக்க உதவுவதுடன் பல பேருக்கு வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதான பிரதேச செயலாளர் பிரிவுகள் அனைத்திலும் கண்ணாடி சேகரிப்பு மையங்களை PGC நிறுவனம் அமைத்துள்ளதுடன் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் தமது கண்ணாடி கழிவுகளை இந்த சேகரிப்பு மையங்கள் மூலமாக அப்புறப்படுத்தவும் இடமளிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட முன்னெடுப்பிற்கு ஆதரவாக முன்னின்று செயற்பட்டு வருகின்ற PGC நிறுவனம் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்காக “இலங்கை மீள்சுழற்சியாளர்களின் சங்கம்” என்ற பெயரில் அமைப்பொன்றையும் நிறுவியுள்ளது.

சமூகத்தின் மீதும் சூழல் மீதும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான  ஈடுபாட்டின் தொடர்ச்சியாக PGC நிறுவனம் மேற்குறிப்பிடப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவளித்து வருவதுடன் அறிவூட்டுவது மட்டுமன்றி இதற்கான மாற்றுத் தீர்வுகளையும் வழங்கி இந்த மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03
news-image

எதிர்கால வணித் தலைவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்...

2024-05-11 19:07:20