2023 உலக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்பதே தனது இலட்சியம் என சாந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளரான சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த்.பி.எல்கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்ததுஇதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டால்அவரது தடைக்காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் கடந்த 13 ஆம் திகதியுடன் முடிந்ததுஇதையடுத்து அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தீர்மானித்துள்ளார்கடந்த சில தினங்களாக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

 

நான் உலகக் கிண்ண இந்திய அணியில் இடம்பெற்ற வீரர் என்பது உண்மை தான்ஆனால் இப்போது நான் ஒரு புதுமுக வீரர் போல உணர்கிறேன்.

ஆண்டுகளுக்கு பிறகு விளையாட வருகின்ற போதிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதுமீண்டும் விளையாட அனுமதிக்க கோரி இந்திய கிரிக்கெட்  கட்டுப்பாட்டுச் சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

 

அவுஸ்திரேலியாநியூஸிலாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் கழக அணிகளுக்காக விளையாட விரும்புகிறேன்இது தொடர்பாக பல்வேறு முகவர்களிடம் பேசி வருகிறேன். 2023 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட வேண்டும் என்பதே எனது இலட்சியம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.