பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு ரபாயேல் நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்ச் பகிரங்க போட்டி கொரோனா வைரஸ் காரணமாக செப்டெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பிரெஞ்ச் பகிரங்க போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க பகிரங்க போட்டியில் ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் போட்டி நடந்தது.

ஆனால் பிரெஞ்ச் பகிரங்க போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா மருத்துவ தடுப்பு பாதுகாப்பில் ரசிகர்களை அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நடாலின் இந்த எதிர்ப்பு காரணமாக போட்டி அமைப்பாளர்கள் ரசிகர்களுக்கு அனுமதியை மறுப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34 வயதான நடால் பிரெஞ்ச பகிரங்க பட்டத்தை 1 ஆவது முறையாக வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். அவர் பிரெஞ்ச் பட்டத்தை 12 தடவை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.