ஆனைமடு - ஒட்டுக்குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேக நபர்கள் நால்வர் இன்று புதன்கிழமை அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனைமடு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆனைமடு மற்றும் ஒட்டுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 35,45 மற்றும் 60 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேக நபர்கள் ஒட்டுக்குளம் வயலின் பழைமையான நிலப்பகுதியின் மேற்பரப்பிலிருந்த கற்களை அகற்றி 15 அடி ஆழத்திற்கு தோண்டியதாகவும் அடுக்காகக் காணப்பட்ட கற்களை தகர்த்தி 4 நாட்கள் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சந்தேக நபர்களிடமிருந்து  மண்வெட்டி, கயிறு, வயர்கள் மற்றும் இரும்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.