உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகள், கைக்குண்டுகளுடன் 10 பேர் கைது

Published By: R. Kalaichelvan

16 Sep, 2020 | 03:24 PM
image

நாட்டின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்நாட்டு,  வெளிநாட்டு துப்பாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி ரவைகளோடு சந்தேகநபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மீட்டியாகொட

விசேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது மீட்டியாகொட - கலுபே பகுதியிலுள்ள காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பிரிஸ்டல் துப்பாக்கி 1, வெளிநாட்டு போர 12 ரக துப்பாக்கி 1, உள்நாட்டு போர 12 ரக துப்பாக்கி 1 , வெளிநாட்டு கைக்குண்டுகள் 2 மற்றும் 9 மில்லிமீற்றர் அளவிலான துப்பாக்கி ரவைகள் 10 ஆகியன இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திக்வெல்ல

ஹொரண விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய திக்வெல்ல நகர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டு ரிவால்வர் வகை துப்பாக்கிகள் 2, உள்நாட்டு போர 12 ரக துப்பாக்கி 1 மற்றும் 3.8 மில்லிமீற்றர் நீளமான துப்பாக்கி ரவைகள் 5 என்பவற்றோடு சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திக்வெல்ல நாகலுகமுவ மற்றும் வலஸ்கல பகுதிகளைச் சேரந்த 39, 45 மற்றும் 27 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை

கேகாலை - வத்துர பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் போர 16 ரக துப்பாக்கிகள் 2 மற்றும் துப்பாக்கி ரவைகள் இரண்டுடன் மொரொன்தொட்ட மற்றும் வத்துர பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 52 வயதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருவன்வெல்ல

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்மன்ஹில் வத்த பகுதியில் சீதாவக்கபுர குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது போர 12 ரக உள்நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் கல்பாத்த பகுதியைச் சேர்ந்த 60 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யக்கலமுல்ல

யக்கலமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய உடுவெல்ல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போர 12 ரக வெளிநாட்டு துப்பாக்கியுடன் உடுவெல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பகுதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது வத்தஹேன பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் உடுவெல்ல - மாகெதற பகுதியைச் சேர்ந்த 46 வயதான மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதவாச்சி

மதவாச்சி - பிஹிபியகொல்லேவ மயானத்திலிருந்து போர 12 வகை வெளிநாட்டு துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உடுகம

உடுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாக்கியாதெணிய பகுதியில் முனனெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது போர 12 ரக வெளிநாட்டு துப்பாக்கியடன் நாக்கியாதெணிய பகுதியைச சேர்ந்த 31 வயதான சந்தேகநபரொருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

மேற்குறித்த கைதுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

2025-12-17 17:34:29
news-image

ஏறாவூரில் விடுதியில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில்...

2025-12-17 16:26:09
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை சார் முச்சக்கர...

2025-12-17 17:42:03
news-image

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி,...

2025-12-17 15:43:07
news-image

அனர்தகால உதவிகளை மக்களுக்கு சென்றடைவதை அரச...

2025-12-17 17:31:21
news-image

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமான நிகழ்வை...

2025-12-17 17:30:29
news-image

கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

2025-12-17 17:29:37
news-image

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

2025-12-17 17:18:26
news-image

கொத்மலை - ரம்பொடை பகுதியில் மீட்கப்பட்டது...

2025-12-17 17:28:57
news-image

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை நிர்வாகப்...

2025-12-17 17:11:28
news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48