விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்தது !

Published By: Digital Desk 4

16 Sep, 2020 | 03:20 PM
image

வட மாகாண முன்னாள் முதலமைச்சர், சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  சுமுகமாக நிறைவுக்கு வந்தது.

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான  சி.வி.விக்கினேஸ்வரன், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறியும் அதற்கு மன்னிப்புக்கோர வேண்டுமெனவும் மேலும் வழக்கிற்காக தாங்கள் செலவழித்த தொகையை திருப்பி செலுத்த வேண்டுமெனவும்  வடமாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, டெனீஸ்வரன் சார்பில் ஆஜரான சட்டத்திரணி சில நிபந்தனைகளை முன்வைத்து வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

விக்கினேஸ்வரன் தலைமையில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் குறித்த நிபந்தனைகளை நிராகரித்ததுடன் தொடர்ந்தும் வழக்கை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கு இன்றையதினம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நிபந்தனைகள் எதுவும் இன்றி வழக்கை வாபஸ்பெற டெனீஸ்வரன்  சார்பில் ஆஜரான சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து இருதரப்பினரும் வழக்கை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவர ஏற்றுக்கொண்டனர்.இந்நிலையில் குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51