முல்லைதீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஒரு தனியார் நிலத்தில் இருந்து பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்படை கட்டளை நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, முல்லைதீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்ற ஒரு தனியார் நிலத்தின் குப்பைகளில் இருந்து இந்த வெடிபொருட்களை கண்டுபிடிக்கப்பட்டதுடன் மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த வெடிபொருட்கள் பயங்கரவாதிகளால் விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது, மூன்று பிளாஸ்டிக் பைகளில் அடங்கியுள்ள சுமார் 45 கிலோ கிராம் டிஎன்டி வெடிபொருட்கள், சுமார் 5 கிலோ கிராம் சி 4 வெடிபொருட்கள், 81 மிமீ அளவின் 07 மோட்டார் குண்டுகள், அடையாளம் தெரியாத 15 உருகிகள், 118 எக்ஸ்பெயின் சார்ஜஸ்கள், ஒரு கிலேமோ குண்டு, அடையாளம் தெரியாத ஒரு குண்டின் பகுதி (தோராயமாக 08 கிலோ எடை) மற்றும் 01 மின்சார டெட்டனேட்டர் ஆகியவை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக கடற்படை வெடிபொருட்களை முல்லைதீவு பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன், இப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.