செப்டம்பர் 16 ஆம் திகதியை உலக ஓஸோன் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உலகளவில் அதிகரித்து வரும் ஓசோன் படல அடர்த்தி குறைவின் காரணமாக ஐக்கிய  நாடுகள் சபை செப்டம்பர் 16 ஆம் திகதியை, சர்வதேச ஓசோன் தினமாக அறிவித்தது. 

சூரியகதிர்கள் நேரடியாக பூமியை வந்தடையும் போது, அதிலுள்ள புற ஊதாக்கதிர்களால் பூமியிலுள்ள உயிரினங்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இயற்கையாக பூமியின் மேற்பரப்பில் ஓசோன் படலம் அமையப் பெற்றிருக்கிறது.

இந்த ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காகவும், இது குறித்த முறையாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும். இது தொடர்பான தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.  எம்மில் பலரும் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள், வலி நிவாரணி, குளிர் சாதன கருவி  ஆகியவற்றில் குளோரோ புளூரோ கார்பன் எனும் வேதிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக இவற்றிலிருந்து வெளியாகும்  கார்பன் துகள்கள் காலநிலையையும், சுற்றுப்புற சூழலையும் பாதிக்கிறது. இதன் பக்கவிளைவாக ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையத் தொடங்குகிறது.

ஓசோன் அடர்த்திக் குறைவால் வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தோல் புற்றுநோய், பார்வைத்திறன் பாதிப்பு, விலங்குகளின் திசுப் பாதிப்பு, தோல் பாதிப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. அத்துடன் இதன் காரணமாக இனப்பெருக்க வாய்ப்பும் குறைகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெயில் கோடைக்காலங்களிலும், ஏனைய காலங்களிலும் இயல்பான அளவை விட அதிகளவில் இருப்பதை நாம் உணரலாம். 

இதன் காரணமாக ஓசோனை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்ளவேண்டும். இதற்காக சர்வதேச சமூகம் பரிந்துரைக்கும் வழிமுறைகளையும், நடைமுறைகளையும் நாம் உறுதியாக பின்பற்றவேண்டும்.  

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.