கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள  காட்டுத்தீயை அடுத்து அங்கு நிலைமைகள் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெப்பநிலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள தீ  மிகவும் மோசமடைந்துள்ளதாகவும்  பாரிய அழிவுகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த நுற்றாண்டில் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு காற்று மாசடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருவதுடன் கிராமபுறங்கள் மற்றும் அதனை அண்டிய சூழலை. வெகுவாகப் பாதித்துள்ளது. அதிலிருந்து வெளிவரும் புகை நகர்புறங்களை புகை மண்டலாமாக்கியுள்ளது. 

பொதுவாகவே கலிபோர்னியாவில் காட்டுத்தீ கடும் சவாலாகவே இருக்கும். எனினும் தற்போதைய காட்டுத்தீ அதனையும் மிஞ்சியதாக காணப்படுகிறது.

தீயணைப்பு குழுவினர் 20 நிமிடங்களே ஓய்வெடுத்துக்கொண்ட நிலையில் தொடரச்சியாக கடந்த 64 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஓய்வின்றி போராடி அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசு படிந்த காற்று கலிபோர்னியாவின் மேற்கரையோரமாக வீசுவதுடன் வீடுகள்,வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் என்பவற்றில் படிந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான மாசு  காரணமாக பெரும்பாலான மக்கள்  இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அத்துடன் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மிகமோசமான மாசு காரணமாக ஒரேகான்,வொஷிங்டன்  மற்றும்  கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் மக்கள் கடந்த சில வாரகாலமாக குறித்த சுகாதார  மற்ற   காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான மக்கள் தென் ஓரேகான் பிரதேசங்களிலிருந்து காணமால் போயுள்ளனர் எனவும், கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்கு கரையோர பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள பல காட்டுத்தீ காரணமாக எரிந்து போயுள்ள நிலையில், ஆயிரக்கனக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் சென்பிரான்சிஸ்கோ மற்றும் போலந்து பிரதேசங்களிலும் காற்று  மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலைகள், வறட்சிகள், எல் நினோ போன்ற காலநிலை மாற்றம் ஆபத்தை அதிகரிக்கும் மற்றும் காட்டுத்தீக்களின் நடத்தையை வியத்தகு முறையில் மாற்றுகிறது.