நாவலப்பிட்டி பகுதியில் குளவிக் கொட்டுக்குள்ளாகி 69 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளவிக் கொட்டினையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.