மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 656 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 371 இலங்கையர்கள் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே -650 என்ற விமானத்தில் அதிகாலை 4.20 மணிக்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் ஜோர்தானின், அம்மானிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -1506 என்ற விமானத்தில் 285 இலங்கையர்கள் நேற்றிரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.