பாலியல் குற்றவாளிகளுக்கு இரசாயன விதைநீக்கம் செய்யப்பட வேண்டும் - இம்ரான் கான்

Published By: Sajishnavan

15 Sep, 2020 | 05:05 PM
image

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் நேற்று திங்கட்கிழமை, மிக மோசமான பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு ரசாயன விதைநீக்கம செய்து தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



பாகிஸ்தானில் தாயொருவர் வாகனத்தில் எரிபொருள் முடிந்த நிலையில் தவிப்பதை வாய்ப்பாக பயன்படுத்தி பிள்ளைகளுக்கு முன்னாலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை நாடுமுழுவதும் எதிர்ப்பாளர்களை உருவாக்கியது.

இம்ரான் கான் - பாகிஸ்தான் பிரதமர்

ஒரு ஆண் துணையில்லாமல் இரவில் வாகனம் ஓட்டியதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு பொலிஸ் அதிகாரி குற்றம் சாட்டியதால் இந்த வழக்கு கூடுதல் கோபத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது.

இந்த வழக்கைப் பற்றி கேட்டபோது பதிலளித்த பிரதமர் இம்ரான் கான், மிக மோசமான பாலியல் குற்றங்கள் பொது தூக்கிலிடப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்,

ஆனால் இது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மரண தண்டனையை எதிர்க்கும் நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும் என்றும் கூறினார்.

"நான் நினைப்பது என்னவென்றால், இரசாயன விதைநீக்கம் இருக்க வேண்டும், இது பல நாடுகளில் நடக்கிறது என்று நான் படித்திருக்கிறேன்," என்று இம்ரான் கான் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46