அக்ஷரா ஹாசனின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

15 Sep, 2020 | 04:09 PM
image

இளம் நடிகை அக்ஷரா ஹாசன் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்திற்கு 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'அமெரிக்க மாப்பிள்ளை' என்ற வலைதள தொடரை இயக்கி இணையவாசிகளின் பரவலான கவனத்தை பெற்றவர் இளம் இயக்குனர் ராஜா ராமமூர்த்தி. இவர் இயக்குனராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ' என பெயரிடப்பட்டிருக்கிறது. 

இப்படத்தில் கதையின் நாயகியாக உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய வாரிசான அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பாடகி உஷா உதுப் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிக்கிறார். 

ஸ்ரேயா தேவ் துபே ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, சுஷா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை அக்ஷரா ஹாஸனின் முகம் மட்டும் வித்தியாசமான கோணத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் இணையவாசிகளின் ஆதரவு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right