பரிபூரண வணிக வாயு குளிரூட்டிகளை வழங்கும் நவலோக MEP Concepts

Published By: Priyatharshan

15 Jul, 2016 | 10:13 AM
image

சொகுசான பொருளாக ஒரு கால கட்டத்தில் கருதப்பட்ட வாயு குளிரூட்டி தற்போது நாளாந்த வாழ்க்கையில் அத்தியாவசிய அங்கமாக மாற்றமடைந்துள்ளது.

நிறுவனங்கள் ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் வலுச் சிக்கனமான கட்டமைப்புகளுடன் போட்டிகரத்தன்மை வாய்ந்த, நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் வணிக ரீதியான வாயு குளிரூட்டி தீர்வுகளை நாடுகின்றமை இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

நவலோக ஹோல்டிங்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான நவலோக MEP Concepts பிரைவட் லிமிட்டெட்டினால் உலகின் சிறந்த மற்றும் புகழ்பெற்ற வாயு குளிரூட்டி வர்த்தக நாமங்கள் தமது அனுபவங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி எந்தவொரு சூழலுக்கும் பொருத்தமான வாயு குளிரூட்டல் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளன.

2015 முதல், நவலோக MEP என்பது உலகின் முன்னணி வர்த்தக நாமங்களான Carrier, Toshiba, Helios மற்றும் Liang Chi ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு வகையான வாயு குளிரூட்டிகள் மற்றும் குளிரூட்டும் சாதனங்களை விநியோகித்து வருகிறது.

Ceyoka (Pvt) Ltd முகாமைத்துவ பணிப்பாளர் ஹர்ஷித் தர்மதாச கருத்து தெரிவிக்கையில்,

“நாம் பரிபூரண வணிக மற்றும் எளிமையான வணிக பாவனைக்குரிய வாயு குளிரூட்டி தயாரிப்புகளை இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறோம். மாறி வரும் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு இந்த செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். எமது விஸ்தரிக்கப்பட்ட வாயு குளிரூட்டித் தெரிவுகளின் மூலமாக, முதல் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் வெளிப்படுத்தப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது வசதிகளுக்கு சிறந்த பெறுமதிகளை சேர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.

இந்த தெரிவுகள், நவீன தொழில்நுட்பம், வலுச்சிக்கனம், சூழலுக்கு பாதுகாப்பான தன்மை ஆகியவற்றுடன் வலுச்சிக்கனமான கொம்பிரெசர்கள் போன்றன American Society of Heating Refrigeration and Air Conditioning Engineers (ASHRAE) இனால் இலங்கையின் வாயுகுளிரூட்டல் துறைக்கு பொருத்தமானதென உறுதி செய்யப்பட்டுள்ளன.

ASHRAE என்பது மதிப்பைப் பெற்ற சர்வதேச நிறுவனம் என்பதுடன், வாயு குளிரூட்டல் காற்றோட்ட வெப்பமாக்கல், குளிரூட்டல் வசதிகள் அபிவிருத்தி மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் முன்நோக்கிய செயற்பாடுகள் போன்ற துறைகளில் காணப்படும் நிபுணர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

நவலோக MEP Concepts இன் புத்தாக்கமான குளிர வைக்கும் தீர்வுகள் உலகத்தரம் வாய்ந்த Carrier நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்நிறுவனத்தினால் வணிக ரீதியான மற்றும் எளிமையான வணிக ரீதியான HVAC (central heating ventilation and air-conditioning) கட்டமைப்புகள், chilled water ducted, chilled water cassette மற்றும் வாயு கையாளல் அலகுகள் போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன. Carrier  தயாரிப்புகள் சகல விதமான பாரிய வணிக அப்ளிகேஷன்களுக்கும் சிக்கனம் தங்கியிருக்கக்கூடிய குளிர வைக்கும் திறன் ஆகியவற்றை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

VRF (Variable Refrigerant Flow) மற்றும் VRV (Variable Refrigerant Volume) கட்டமைப்பு போன்றன டொஷிபாவின் மேம்படுத்தப்பட்ட காலநிலை கட்டுப்படுத்தல் தொழில்நுட்பங்களில் அமைந்துள்ளன. இவை கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலப்பகுதியில் வெவ்வேறு வெப்பநிலைகளை பேண உதவியாக அமைந்துள்ளன. அழகிய உள்ளக அலகுகள் மூலமாக நெகிழ்ச்சித் தன்மை மற்றும் வலுச்சிக்கனம் போன்றன உறுதி செய்யப்படுகின்றன.

Helios ventilation தயாரிப்புகளில் காற்றாடிகள் மற்றும் ancillaries போன்றன அடங்கியுள்ளன. இவை நிறுவனத்தின் ஆறு தசாப்த கால அலங்காரம் மற்றும் உற்பத்தி அனுபவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

நவலோக MEP Concepts நிறுவனம் முன்னணி மலேசிய குளிர வைக்கும் டவர் உற்பத்தியாளரான Liang Chi உடன் கொண்டுள்ள பங்காண்மை மூலம் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான குளிர வைக்கும் டவர்களை உயர் தரத்தில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. தாய்வானின் நவீன உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இந்த டவர்கள் சர்வதேச ரீதியில் காப்புரிமை பெற்ற உயர் வினைத்திறன் வாய்ந்த தயாரிப்புகளாகும்.

தனது அர்ப்பணிப்பான தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு நவலோக MEP Concepts என்பது அதன் முன்னணி வர்த்தக நாமங்களின் சேவைகளை வழங்கி வருகிறது. 

பொருட்களின் தரம் என்பதன் மீது அதிகளவு கவனம் செலுத்துவதுடன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு சிக்கனம் மற்றும் உயர் சௌகர்யம் ஆகியவற்றை வழங்குவதற்கு அர்ப்பணிப்பையும் நிலையாண்மையும் நிறுவனம் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03
news-image

எதிர்கால வணித் தலைவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்...

2024-05-11 19:07:20