இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரரான மஹேந்திர சிங் தோனியைப் போன்று போட்டியை வெற்றியுடன் முடிக்க நானும் விரும்புகிறேன் என தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்கா அணியின் இடது கை அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர், கடந்த 8 ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

டி20 கிரிக்கெட்: ஒரே ஓவரில் 5 சிக்ஸ்; 35 பந்தில் சதம்; டேவிட் மில்லர் உலக  சாதனை || David miller recored Fastest t20 century by 35 balls

தோனியை சிறந்த ‘பினிஷராக’ இருப்பதுபோல் நானும் இருக்க விரும்புகிறேன் என்று டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

டேவிட் மில்லர் இதுகுறித்து கூறுகையில், ‘‘தோனி அவரது வேலையை எப்படி செய்து முடிக்கிறாரோ அதே  வழியில் நானும் செல்ல விரும்புகிறேன். அவர் அமைதியாக இருப்பது, அவர் எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்று நினைக்க தோன்றும்.

அவர் தன்னை சித்திரிக்கும் விதம், மிகவும் சிறந்தது. அவரைப் போன்று நானும் விரும்பி செயல்படுவேன். அதே ‘எனர்ஜியை’  வெளிப்படுத்த முயற்சி செய்வேன். தோனி அவருடைய பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து வைத்து அதற்கு ஏற்ப செயற்படுகிறார். நானும் அதை செய்வேன். அவரைப்போன்று துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை விட, அவரின் சில ‘சேஸிங்கை’ கண்டு வியப்படைகிறேன். அவரைப் போன்று போட்டியை நிறைவு செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.’’ என்றார்.