மஞ்சள், தெற்காசிய நாடுகளின் சமையலில் பரவலாக ஒரு சுவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் மஞ்சள் பல நூற்றாண்டுகளாக ஒரு பாரம்பரிய மருந்துவப்பொருளாக  பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அண்மை காலமாக  தான் அறிவியல் மஞ்சளின் மருத்துவ குணங்களை தீவிரமாக ஆய்வுக்குட்படுத்த ஆரம்பித்துள்ளது.

இவ் ஆய்விலேயே, மூட்டுவலியை  குணப்படுத்துவதில் மருந்துகளை விட மஞ்சள் சிறந்த பயனை தருவதாக விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர். 

அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பல்கலைக்கழகம் 70 நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் முழங்கால் கீல்வாதம் மற்றும் முழங்கால் மூட்டுக்குள் வீக்கம் இருந்துள்ளது. இவர்கள் மருந்துக்கு பதிலாக மஞ்சளை பயன்படுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . 

Rheumatoid arthritis (RA): Symptoms, causes, and complications

இவ் ஆய்வின் முடிவில்  மஞ்சள்மசாலா கீல்வாதத்திற்கு ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயற்படுவது விஞ்ஞான ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட முடிவுகளில், மஞ்சளை பயன்படுத்தும் நோயாளிகள் மருந்தை பயன்படுத்தும் குழுவில் உள்ளவர்களை விடவும் குறைவான வலியைப் பதிவு செய்துள்ளதுடன் பக்க விளைவுகள் எதையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, மஞ்சளை கொண்டு அண்மை காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி நுரையீரல் நோய், அல்சைமர், இதய நோய் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுக்கான சிறந்த சிகிச்சையாக விஞ்ஞானிகளினால் சோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.