இந்தியாவில் கொரோனா உச்சம் பெற்றுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமாகியுள்ளார். 

இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ள நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.