நாட்டின் சில பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயினுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காலி

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்சன்புர பகுதியில் மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 10.56 கிராம் ஹெரோயினுடன் வெல்சன்புர , வக்வெல்ல வீதி - காலி பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் காலி குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் காலி - கலாப்பிட்டிய பகுதியில் 2.11 கிராம் ஹெரோயினுடன் ஜம்புகொட - கலாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 44 வயதான சந்தேகநபரொருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை

களுத்துறை தெற்கு பகுதியில் பயாகல பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 9.8 கிராம் ஹெரோயினுடன் பிங்வத்த வீதி - பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிபன்ன

வெலிபன்ன - ஹேன்பிட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம்  ஹெரோயினுடன் ஹேன்பிட்ட - வலகெதற பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.