சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் இலக்கிய இடைத்தொடர்புகள் குறித்த ஒரு புதிய கருப்பொருள் அனுபவம் கொழும்பு, இலங்கை (செப்டெம்பர் 9, 2020): ஒரு புதிய இயல்பான சூழல் ஒரு புதிய சாதாரண அனுபவத்திற்கு அழைப்பு விடுக்கிறது. Colombo Fashion Week (CFW) அறிவார்ந்த மற்றும் பொறுப்பான ஆற்றல் மூலம் ஒரு அனுபவத்துடனான விற்பனை நிகழ்வைக் கையாளுகிறது. CFW Retail Week என்ற தலைப்பில், 2020 செப்டெம்பர் 11 முதல் 2020 ஒக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள மூன்று வார நிகழ்ச்சித்திட்டம் நவநாகரிகம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு மற்றும் இலக்கிய வாரம் போன்ற வாராந்த கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புகளை அடிப்படையாகக் கொண்டதுடன், இது விருந்தினர்களுக்கும் புரவலர்களுக்கும் சுவாரசியமான விற்பனை தொடர்புகளைத் தருகிறது. One Galle Face மற்றும் HSBC Sri Lanka ஆகியவற்றுடன் இணைந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

ஒரு மாத கால நிகழ்வுத் திட்டம் என்பது அறிவு மற்றும் ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்ட அனுபவமாகும், இதில் தொடர்புடைய கருப்பொருள்கள் மற்றும் விடயங்களில் புத்தக வாசிப்புகள் மற்றும் செயலமர்வுகள், பெறுமதி சேர்க்கப்பட்ட கொள்வனவு அனுபவங்கள், திரைப்படத் திரையிடல்கள், சிறுவர் சமையல் நிகழ்வு, குழந்தைகளுக்கான கலைச் செயலமர்வு மற்றும் வைன் மது சுவைத்தல், உணவு மற்றும் பான வகை தயாரிப்பு விளக்கங்கள் போன்றவை பற்றிய நிபுணர் உரையாடல்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் அடங்கும். 

“ஒரு சமகால பேரங்காடிச் சூழலில் உள்ள சுவாரசியம் மாற்றம் கண்டு வருவதுடன், கவர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. சுவாரசியமான மற்றும் படைப்பாக்கம் நிறைந்த ஒத்துழைப்புகளைக் கொண்டுவருவதன் மூலம் வலிமையை மேம்படுத்த நாங்கள் விரும்பினோம், இதனால் கலந்து கொள்கின்றவர்கள் மத்தியில் அறிவு தூண்டப்பட்டு பணத்திற்கு அப்பாற்பட்ட மதிப்பைச் சேர்க்கிறது. OGF என்பது கொழும்பில் உள்ள ஒரு தனித்துவச் சின்னமான பேரங்காடி ஆகும். புதிய விடயங்களுடன் ஒத்துழைக்க அவர்கள் ஆர்வமாக இருப்பதால் இந்த புதிய எண்ணக்கருவினை எம்மால் பரீட்சித்துப் பார்க்க முடியும். அறிவு, பொழுதுபோக்கு மற்றும் இடைத்தொடர்பாடல்கள் இந்த அனுபவக் கருப்பொருளின் அடிப்படையாகும். 

நவநாகரிகம் போன்ற ஒரு படைப்பாக்கத் துறையிலிருந்து அனுபவம்மிக்க கொள்வனவு என்பது ஒரு தர்க்கரீதியான அடுத்த கட்டமாகும் என்பதை நான் உணருவதுடன், இந்த புதிய கருப்பொருளில் OGF எங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நீண்ட கால கூட்டாளர் HSBC இந்த விற்பனை வாரத்துடன் எங்கள் பயணத்தைத் தொடர்ந்ததில் நான் மகிழ்ச்சியடைவதுடன், அவர்கள் மற்றுமொரு புதிய வங்கிச்சேவை உற்பத்தியை இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளனர்,” என்று CFW Holdings முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. அஜய் வீர் சிங் கூறினார்.

இந்த புதிய கொள்வனவு அனுபவத்திற்கான இடம் மற்றும் கூட்டாளர் One Galle Face ஆகும். One Galle Face என்பது கொழும்பின் முதலாவது சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்பட்ட கலப்பு-பயன்பாட்டு நிர்மாணச் செயற்திட்டமாகும். 480,000 சதுர அடியில், எட்டு கால்பந்து ஆடுகளங்களுக்கு சமமான விசாலமான இடை வசதியைக் கொண்டுள்ள, ழுநெ புயடடந குயஉந பேரங்காடி இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச பேரங்காடி ஆகும். ஏழு மாடிகளைக் கொண்ட பேரங்காடியில் 200 இற்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் பொருட்களையும், சேவைகளையும் விற்பனை செய்வதுடன், பார்வையாளர்களுக்கு உணவு, பொழுதுபோக்கு, அழகு, தொழில்நுட்பம் மற்றும் பொருட் கொள்வனவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்யும் இணையற்ற கொள்வனவு அனுபவத்தை வழங்குகிறார்கள்.

HSBC Premier Cards அட்டைகள்  விற்பனை வாரத்தின் குறிப்பாக கொள்வனவு அனுபவத்தின் முக்கிய நாணயமாக இருக்கும். 13 ஆவது ஆண்டிற்காகவும் கொழும்பில் மிகவும் விரும்பப்படும் நவநாகரிக நிகழ்வு ஏற்பாட்டாளர்களான CFW நிறுவனத்தின் பிரதான அனுசரனையாளராக செயற்படும் HSBC, அதன் சமீபத்திய நீட்டிப்பு நிகழ்வான CFW Retail Week நிகழ்வுடன் கூட்டாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. எங்கள்  Premier வாடிக்கையாளர்கள் சர்வதேச சிந்தனையுள்ளவர்களாகவும், சர்வதேச வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பதால், எங்கள் புத்துணர்வூட்டப்பட்ட HSBC Premier முன்மொழிவை உண்மையிலேயே ஒரு குடும்ப விவகாரமாக மாற்றுவதோடு, இலங்கையிலேயே அவர்களுக்கு ஒரு சர்வதேச அனுபவத்தை ஏற்படுத்த இடமளிப்பதே எங்கள் முயற்சியாக உள்ளதுடன், செப்டெம்பர் 10 முதல் ஒக்டோபர் 4 வரை. CFW Retail Week 3 வார செயற்பாடுகளின் போது திட்டமிடப்பட்டுள்ளது. 

CFW அணி திட்டமிட்டுள்ள பரந்த செயற்பாடுகளில் பங்கேற்க எங்கள் Premier வாடிக்கையாளர்களை அழைக்கிறோம். அவர்களது குடும்பத்தினருடன் One Galle Faceபேரங்காடிக்கு வருகை தருமாறு ஊக்குவிக்கிறோம். நவநாகரிகம், சுற்றுச்சூழல் மற்றும் இலக்கியம் சார்ந்த சிந்தனை தலைமைத்துவ அமர்வுகளால் நிரம்பவுள்ள CFW Retail Week நிகழ்வை அனுபவிக்கவும். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் உள்நாட்டு வடிவமைப்பாளர்களை ஆதரிக்கவும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று என்று HSBC Sri Lanka சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல்கள் துறை தலைமை அதிகாரியான தரங்க குணசேகர அவர்கள் தெரிவித்தார்.

CFW Retail Week நிகழ்வானது அறிவு மற்றும் ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்ட கொள்வனவு அனுபவங்களை உருவாக்கும், இது உரையாடல்கள் மற்றும் பிற நிகழ்வுகளை வாராந்த கருப்பொருள்களாக வகைப்படுத்துகிறது. இன்றைய சூழலில், அனைவருமே நமது சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது முக்கியம், எனவே பார்வையாளர்கள் மத்தியில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்காக செயலமர்வுகள் மற்றும் உரையாடல்கள் மூலம் அறிவையும் விழிப்புணர்வையும் வளர்ப்பதற்கு ஒரு வார கால திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு வாரம் எங்கள் பூமியின் மீது அக்கறை செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், மற்றும் அக்கறை உணர்வு கொண்ட பிரஜைகள் மற்றும் நுகர்வோர் ஆக செயற்பட வேண்டியதையும் ஊக்குவிக்கிறது. 

BPPL Holdings PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி அனுஷ் அமரசிங்க அவர்களின் பிளாஸ்டிக்கின் தாக்கம், Oceanswell இன் ஸ்தாபகர்; மற்றும் நிர்வாக பணிப்பாளரான கலாநிதி ஆஷா டி வோஸ்; அவர்களின் கடல் பாதுகாப்பு, இலங்கையில் The Wilderness & Wildlife Conservation Trust (WWCT) இன் நிறுவன இணை அறங்காவலர்களான அஞ்சலி வாட்சன் மற்றும்  கலாநிதி ஆண்ட்ரூ கிட்டில் ஆகியோரின் இயற்கை அளவிலான பாதுகாப்புக் குடையின் கீழ் சிறுத்தை மற்றும் Blue Resources Trust இன் இணை ஸ்தாபகரான டானியல் பெர்னாண்டோ அவர்களின் இந்தியப் பெருங்கடலில் சுறாக்கள் மற்றும் கதிர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய ஆர்வமுள்ள சுற்றுச்சூழல் நிபுணர்களின் அறிவு பகிர்வு செயலமர்வுகள் மற்றும் கருத்துப் பகிர்வுகள் மூலம் இது முன்னெடுக்கப்படும்;.

இந்த ஈர்க்கக்கூடிய கொள்வனவு அனுபவத்திற்கு மேலாக, One Galle Face பேரங்காடியின் 2 ஆவது தளத்தில் The Edit  என்ற ஒரு பிரத்தியேக விற்பனை மையத்தையும் CFW ஆரம்பிக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அனைத்து CFW ஆடை வடிவமைப்பாளர்களும் ஆகஸ்ட் மாதத்தில் நவநாகரிக கண்காட்சி நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட சமீபத்திய சேகரிப்புகளை விற்பனை செய்வார்கள். The Edit ஆனது CFW  வடிவமைப்பாளர்களுக்கு பரந்த வாடிக்கையாளரபார்வையாளர்களுடன் இணைவதற்கும் அவர்களின் சேகரிப்புகளை ழுநெ One Galle Face இல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனை செய்வதற்கும் ஒரு பிரத்தியேக விற்பனை இடமாக இருக்கும்.

நவநாகரிகம் மற்றும் ஆரோக்கிய வாரத்தில் இலங்கையின் முதற்தர ஆண்கள் ஆடைகள் தீர்வுகளில் ஒரு பிரபலமான நாமமான ஃபவுசுல் ஹமீத் அவர்களின் நவநாகரிக சீர்ப்படுத்தல் வளர்ச்சி தொடர்பான கருத்துப் பகிர்வுகளை உள்ளடக்கும்;. Buddhi Batiks இன் படைப்பாக்கத்துறைப் பணிப்பாளரான தர்ஷி கீர்த்திசேனவின் சமகால வடிவமைப்பில் பட்டிக்கின் (batik) பங்கு, புகழ்பெற்ற வர்த்தகத்துறை பயிற்றுவிப்பாளரான குமார் டி சில்வாவின் தொழில்முறை ஆசாரம், மற்றும் Colombo Fashion Week இன் முகாமைத்துவப் பணிப்பாளரான அஜய் வீர் சிங் அவர்களின் பொறுப்பான நவநாகரிகம் மற்றும் கடப்பாட்டை நோக்கி பயணம் ஆகிய விடயங்களும் இதில் அடங்கியுள்ளன.

பிரபல இலங்கை எழுத்தாளர்களான அஷோக் ஃபெர்ரி, ஷெஹான் கருணாதிலக மற்றும் ஆர்த்திகா அரோரா பக்ஷி ஆகியோரால் படைக்கப்பட்ட அற்புதமான புத்தக வாசிப்புகளுடன் ஒரு இலக்கிய வாரம் தயார்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களின் ரசிகர்களின் விருப்பமான சில படைப்புகளின் ஒரு பகுதியைப் படித்துக் காண்பிக்கவுள்ளதுடன், அஷோக் ஃபெர்ரி அவர்கள் தனது வரவிருக்கும் புதிய நாவலான “ஒரு திருமணமாகாத மனிதன்” (An Unmarriageable Man) இன் ஒரு பகுதியை வெளியிடுவார்.

CFW Retail Week நிகழ்வைப் பற்றிய கூடுதல் தகவல் விபரங்களுக்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளமான றறற. www.colombofashionweek.com  ஐப் பார்வையிடவும். சமீபத்திய புதுப்பித்த தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மேலும் பலவற்றிற்காக இன்ஸ்டகிராம் (@colombofashionweek) மற்றும் முகநூல் (@colombofashionweek) இல் Colombo Fashion Week நிகழ்வைப் பின்தொடரவும்.